முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சம்பவம் எதிரொலி: சென்னை தேவாலயங்களில் பாதுகாப்பு தீவிரம்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எழும்பூர், அண்ணாநகர், அயனாவரம், புரசைவாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நுங்கம்பாக்கக்தில் உள்ள இலங்கை தூதரகம், ஏர் லைன்ஸ் அலுவலகம் ஆகியவற்றில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் கலியன் மேற்பார்வையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எழும்பூரில் உள்ள புத்த மட அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி ஆலயத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல் ராமேசுவரம், தனுஷ் கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தேவாலயங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து