முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்தார் தினகரன்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க.வை கட்சியாக டிடிவி தினகரன் பதிவு செய்தார்.

டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தினகரன் கட்சி வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டி சின்னம் கிடைத்தது. அனைவரும் பரிசு பெட்டி சின்னத்தில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் தினகரன் அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடிவு செய்தார். இதற்கு வசதியாக அ.ம.மு.க. பொதுச் செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் வக்கீல் செந்தூர் பாண்டியன் இதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து