முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் கடலோரப்பகுதியில் பலத்த பாதுகாப்பு: ஆயுதம் தாங்கிய கடற்படை வீரர்கள் 24 மணி நேரமும் கப்பலில் தீவிர ரோந்து:

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேஸ்வரம் -   இலங்கையில் குண்டு வெடிப்பு எதிரொலியாக ராமேசுவரம் தனுஷ்கோடி கடலில் மத்திய, மாநில பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் நேற்றுக்கு முன் தினம் எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்றுக்கு முன் தினம் முதல் இலங்கைக்கு அருகாமையிலுள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியான ராமேஸ்வரம் கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும்,தீவிரவாதிகள் இந்திய கடலே எல்லையில் நுழைவதை தடுக்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக பாம்பன் கடல் பகுதி முதல் ராமேசுவரம்  அர்ச்சல்முனை,தனுசுகோடி,தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் கடல் பகுதி வரை மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலிலும்,ரோந்து படகிலும்,இந்திய,இலங்கை கடல் எல்லையில் அதி நவீன ரோந்து கப்பலிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதுபோல கரையோரப்பகுதிகளில்  மாநில மரைன் போலீசார் ரோந்து படகில் ஆயுதம் தாங்கி போலீஸார்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலில் மீன்பிடித்துகொண்டிருக்கும் நாட்டு படகு மீனவர்களை சோதனை செய்து சந்தேகத்தின்பேரில் யாரேனும் ஊடுருவியதாக தெரிந்தால் ராமேசுவரம் போலீஸார்களுக்கு தகவல் தரவேண்டும் என அறிவுறுத்தினர்.அதுபோல தனுஸ்கோடி,பாம்பன் பகுதியில் வந்து செல்லும் வாகனங்களை அப்பகுதியில் போலீஸார்கள் சிறப்பு சோதனை சாவடி அமைத்து சோதனை செய்து வருகின்றனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து ராமேசுவரம் தீவு முழுவதும் மத்திய,மாநில போலீஸார்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.மேலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸார்கள் மற்றும் இந்திய கடற்படை,கடலோரப்படை வீரர்கள் கடலோரப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து