முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை பாரத் வாலிபால் கிளப் சார்பாக மாநில அளவிலான வாலிபால் போட்டி: வீரர்களுக்கு பரிசளிப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு, - நிலக்கோட்டை பாரத் வாலிபால் கிளப் சார்பாக யில் மாநில அளவிலான வாலிபால் போட்டி வீரர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பாரத் வாலிபால் கழகம் சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால்  போட்டி நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டிக்கு மு. வ. மாணிக்கம் அன் கோ ஒளிமய உரிமையாளர்,  நிர்வாகியுமான ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.  நிலக்கோட்டை பாரத் வாலிபால் கழகச் செயலாளர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை பாரத் வாலிபால் கழகத் தலைவர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.      நிலக்கோட்டையில் நடந்த போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர்,  22 அணிகள் போட்டியில் கலந்து கொண்ட விளையாடினார்கள்.           இப்போட்டியின் முதல் பரிசை நிலக்கோட்டை பாரத் வாலிபால் கழக அணி வீரர்கள் தட்டிச் சென்றனர்.      இரண்டாம் பரிசை சின்னாளபட்டி காந்திகிராமம் பல்கலைக்கழக அணி வீரர்கள் தட்டிச் சென்றனர். மூன்றாம் பரிசை வடுகபட்டி அணி வீரர்கள்  தட்டிச் சென்றனர்.  நான்காம் பரிசு பெரியகுளம் அணி வீரர்கள் தட்டிச் சென்றனர். இவ்விழாவில் மதுரை ராஜாஜி மருத்துவமனை கல்லூரி டாக்டர் மீனாட்சி சுந்தரம், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன், கூட்டுறவு வீடு கட்டும் கடன் சங்க தலைவர் நாகராஜன், நிலக்கோட்டை பாரத் கழக மூத்த உறுப்பினர்கள் ராமச்சந்திரன், முத்துக்கருப்பன், குணசேகரன்,  மற்றும் கிராம பொதுமக்கள். நிலக்கோட்டை பாரத் கழக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்  நிலக்கோட்டை பாரத் கழக பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.  மாநில அளவிலான  வாலிபால் போட்டியினை நிலக்கோட்டை பாரத் வாலிபால் கிளப் தலைவர் மற்றும் பொறியாளர் வேல்முருகன் தலைமையில் மற்றும் நிர்வாகிகளுடன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து