முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் பிறந்த நாளை கொண்டாடினார் - பிரிட்டன் இளவரசர் சார்லஸின் மகன்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : பிரிட்டன் இளவரசர் லூயிஸ் தனது முதல் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆவார். இவரது மனைவி கேட் மிடில்டன். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவதாக இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி பிறந்தது. இதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைக்கு பிரின்ஸ் லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என்று வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியினர் பெயர் சூட்டினர். மேலும், குழந்தை ஹிஸ் ராயல் ஹைனஸ் பிரின்ஸ் லூயிஸ் ஆப் கேம்பிரிட்ஜ் என்ற அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அரசு 2-ம் எலிசபெத்தின் பேரனும், பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியின் 3-வது குழந்தையான லூயிஸ் நேற்று தனது முதல் பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரபுக்கள் இளவரசின் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர். பிரிட்டன் அரசர் பட்டதற்கு காத்திருப்போர் வரிசையின் 5-வதாக இருக்கும் லூயிஸின் அழகிய புகைப்படங்கள் வலை தளங்களில் முக்கிய இடம்பெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து