முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

அமிர்தசரஸ் : இந்தி சினிமாவில் முன்னணி நடிகரான சன்னி தியோல் நேற்று பா.ஜ.க. தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி தியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. கட்சி சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க.வில் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சன்னி தியோல் நேற்று பா.ஜ.க. தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். முன்னதாக சன்னி தியோல் கடந்த 19-ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து