முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மார்பக புற்று நோயை குணமாக்கியது பசு கோமியம் - சாத்வி பிரக்யா சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

போபால் : என்னுடைய மார்பக புற்றுநோயை பசு கோமியம் குணமாக்கியது என பா.ஜ.க. தலைவர் சாத்வி பிரக்யா கூறியுள்ளார்.

2008 மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா பா.ஜ.க. சார்பில் போபால் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியது. இதனையடுத்து சாத்வி பிரக்யா சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தேர்தலில் போட்டியிடும் சாத்வி பிரக்யா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது கூறியதாவது,

பசுவில் இருந்து கிடைக்கும் பொருட்களால் தான் எப்படி பயன் அடைந்ததாக விளக்கமாக கூறியுள்ளார். அவருக்கு கிடைத்ததில் மிகவும் முக்கியமான நலன் என்னவென்றால் தொடர்ச்சியாக பசு கோமியத்தை குடித்து வந்ததால் அவருடைய மார்பக புற்றுநோய் குணமாகியுள்ளது என்பதுதான். எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. இப்போது அது குணமாகி விட்டது. நான் தொடர்ச்சியாக பசு கோமியம் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் சேர்க்கப்பட்ட பஞ்சகாவ்யாவை தொடர்ந்து எடுத்துக் கொண்டதால் எனக்கு பலன் கிடைத்துள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து