முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் - சென்னை வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வங்கக் கடலில் வரும் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அது இரு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இது 29-ம் தேதி புயலாக மாறுகிறது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக பின்நாட்களில் நகர்வை ஆய்வு செய்கையில் தெரிய வரும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் தமிழகத்தை கடந்தால் சென்னையிலிருந்து நாகைக்கு இடைப்பட்ட பகுதியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரங்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து