முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகளை தாக்கிய எம்.எல்.ஏ. கைது

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

 புவனேஸ்வர் : ஒடிசாவில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகளை தாக்கிய எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.  

ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. பிரதீப் மகராதி. இவர் 6 தடவை தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக பதவி வகித்து வருகிறார். தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இவர் வேட்பாளர்களுக்கு வழங்க பணம் மற்றும் மது பாட்டில்களை தனது பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பூரி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீடு உள்ள ஹுன்கிபூர் கிராமத்துக்கு சென்றனர். 

அங்கு சென்று சோதனை நடத்த முயன்றனர். உடனே பிரதீப் மகராதி எம்.எல்.ஏ. அவர்களை தடுத்ததுடன் தாக்குதல் நடத்தினார்.   

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர்.            இதையடுத்து பிரதீப் மகராதி எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து