முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார இறுதி நாட்களில் திருப்பதியில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது 

திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு இதுகுறித்து  கூறியதாவது:-  கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் மற்றும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால், அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.

உயர் அந்தஸ்தில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு 6 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள்  வழங்கப்படும். அதற்கு மேல் வழங்கப்படமாட்டாது. ஒரே சிபாரிசு கடிதத்தில் 3 பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படமாட்டாது. ஒரு வி.ஐ.பி. சிபாரிசு கடிதத்துக்கு ஒரு  வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். 

இந்த உத்தரவு கோடைக்காலம் முடியும் வரை அமலில் இருக்கும். அதற்கு பக்தர்கள்  தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தான இணை அதிகாரி  கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து