முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காளம் பா.ஜ.க.விற்கு சிறந்த பாடம் கற்பிக்கும்- மம்தா பானர்ஜி திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

 அராம்பாக் : தேர்தலில் மேற்கு வங்காளம் பா.ஜ.க.விற்கு சிறந்த பாடம் கற்பிக்கும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.  

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் நேற்று 3வது கட்டமாக நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 2 மணி நிலவரப்படி 52.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கூறியதாவது:

மத்திய படைகள் ஒரு தலை பட்சமாக பா.ஜ.க.விற்காக மட்டுமே செயல்படுகிறது. மல்தாகா தக்ஷின், பலூர்காட் ஆகிய தொகுதிகளில் பாஜக தொண்டர்கள், வாக்குச்சாவடிக்கு பொது மக்கள் வாக்களிக்க வரும்போது பாஜகவிற்கு வாக்களிக்குமாறு கூறி வருகின்றனர் என தெரிய வந்தது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட பாஜக வேட்பாளர்கள், ஆதரவாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையாக தெரிவித்துள்ளோம். இச்சம்பவத்தின் போது தடுப்பதற்காக போலீசார் யாரும் வாக்குச்சாவடியின் உள்ளே வரமுடியவில்லை. ஏன் இவ்வாறு செய்கின்றனர்? மத்திய படைகள் தேர்தலின்போது மாநிலத்திற்கு வரவேண்டும். ஆனால் மாநில படைகளுக்கு உதவி செய்து விட்டு மத்திய படையினர் சென்றுவிடுகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட இப்படி தான் செய்தார்கள். அதை நான் மறக்கவில்லை. மத்திய படைகளை பா.ஜ.க பயன்படுத்த முடியாது. மேற்கு வங்காளம் உங்களுக்கு நிச்சயம் சிறந்த பாடத்தை கற்பிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து