முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். புள்ளிகள் பட்டியல்: சி.எஸ்.கே.வை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தது டெல்லி

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல். புள்ளிகள் பட்டியலில் சென்னையை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

14 புள்ளிகளுடன்...

ஐ.பி.எல். தொடரின் 12-வது சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி, தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 10 ஆட்டத்தில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது.

டெல்லி முதலிடம்...

இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி இந்த சீசனில் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 11 ஆட்டத்தில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் சென்னை சி.எஸ்.கே. அணியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

மும்பை 3-வது இடம்...

மும்பை இந்தியன்ஸ் 10 ஆட்டத்தில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், கொல்கத்தா 10-ல் நான்கில் வெற்றி பெற்று 6-வது இடத்திலும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து