முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த 21-ந்தேதி,  4 இந்தியர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டது. லட்சுமி நாராயணன், நாராயண் சந்திரசேகர், லட்சுமண கவுடா ரமேஷ் ஆகியோர் பலியானதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது. கேரளாவைச் சேர்ந்த ரெஜினா என்ற பெண் பலியானதை அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் உறுதி செய்தார். வெமுரை துளசிராம், எஸ்.ஆர்.நாகராஜ், கே.ஜி.அனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகியோர் பலியானதை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று உறுதி செய்தது.இவர்களில், ரமேஷ், சந்திரசேகர், ரங்கப்பா, அனுமந்தராயப்பா ஆகியோர் கர்நாடகாவைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதள தொண்டர்கள் என்று தெரிய வந்தது. மற்றொரு தொண்டரான எச்.சிவகுமாரை காணவில்லை.

இந்நிலையில், மேலும் 2 பேர் பலியாகி இருப்பதாக கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம்  தெரிவித்தது.மாரே கவுடா, எச்.புட்டராஜூ ஆகியோர் பலியானவர்கள் ஆவர். இதன்மூலம், இலங்கை சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டினர் 31 பேர் பலியாகி இருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம்  அதிகாரபூர்வமாக அறிவித்தது. இவர்கள் இந்தியா, சீனா, வங்காள தேசம், அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், துருக்கி, சவுதி அரேபியா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து