முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும்வேட்பாளர்கள்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.  . திருப்பரங்குன்றம்: இரா.ரேவதி,அரவக்குறிச்சி: பா.க. செல்வம், ஓட்டப்பிடாரம்: மு.அகல்யா,சூலூர்: விஜயராகவன். இவ்வாறு அந்த கட்சி அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து