முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மீனாட்சிக்கு தேர்தலில் சீட்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புதுடில்லி : பா.ஜ., சார்பில் தேர்தலில் போட்டியிட மீனாட்சி லேகிக்கு காங்., தலைவர் ராகுலே ஒரு வகையில் உதவி செய்துள்ளார். ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

பா,ஜ., செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகிக்கு கட்சியில் நல்ல பெயர் இல்லை. எனவே தேர்தலில் அவருக்கு சீட் தரக்கூடாது என்று பா.ஜ., முடிவு செய்திருந்தது.

ரபேல் விவகாரத்தில் ‛காவலாளியே ஒரு திருடனாக இருக்கிறார்'' என்று மோடி பற்றி சுப்ரீம் கோர்ட் கூறாததை கூறியதாக பேசினார் ராகுல். இதற்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் மீனாட்சி லேகி. இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது.  

இதையடுத்து மீனாட்சி மீது பா.ஜ.,வுக்கு பாசம் ஏற்பட்டு மீண்டும் டில்லி தொகுதியில் போட்டியிட சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. ராகுல் பேசியதும், மீனாட்சிக்கு போன் செய்த அருண் ஜெட்லி, தேவையான பாயின்டுகளை தெரிவித்து உடனே ராகுல் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருமாறு யோசனை கூறினார். அதன்படி மீனாட்சி செய்ததால் பிரதமரின் கவனத்தை ஈர்த்தார். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரை அருண் ஜெட்லி தான் பா.ஜ.க விற்கு அழைத்து வந்தார். கம்பீருக்கு புது டில்லியில் சீட் தர வேண்டும் என்றும் அருண் ஜெட்லி கேட்டார். ஆனால் எப்போதும் சமாதான அரசியல் நடத்தி வரும் அமித்ஷா, மீனாட்சியை கவுரவப்படுத்த விரும்பினார். எனவே அவருக்கு புதுடில்லி தொகுதியை வழங்கிவிட்டு, கம்பீருக்கு கிழக்கு டில்லி தொகுதியை வழங்க ஏற்பாடு செய்தார்.இந்த சம்பவத்தில் இருந்த அறியப்படும் நீதி யாதெனில், அதிர்ஷ்டம் எந்த நேரத்திலும் கதவை தட்டும் என்பது தான். இந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் மீனாட்சி லேகி அரசியல் களத்தில் காணாமல் போயிருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து