தோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      இந்தியா
PM-Modi 2019 03 27

லோகர்தாகா : தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காரணமாக கூற இப்போதே எதிர்க்கட்சிகள் தயாராகத் துவங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் லோகர்தாகா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் இதுவரை மோடியை அவதூறாக பேசி வந்தன. ஆனால் நேற்று முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழி போட துவங்கி உள்ளனர். தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழி போட முடிவு செய்தள்ளனர். பள்ளி மாணவர்கள் தேர்வு சரியாக எழுதாவிட்டால், வீட்டிற்கு வந்து பேனா சரியாக இல்லை என காரணம் கூறுவது போல் தான் இதுவும்.

2 நாட்களுக்கு முன் 2 குழுக்களாக பிரிந்து இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று  தேவாலயங்களிலும், மற்ற இடங்களிலும் பயங்கரவாதிகள் எவ்வாறு தாக்குதல் நடத்தி   உள்ளனர் என்பதை பார்த்திருப்பீர்கள். 2014 ம் ஆண்டிற்கு முன்பு வரை இந்தியாவிலும் அதே போன்ற நிகழ்வுகள் தான் நடந்தேறின என்றார் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து