செய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      இந்தியா
Pinarayi 2019 04 10

திருவனந்தபுரம் : கேரளாவில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களின் கேள்வியால் கோபம் அடைந்தார்

கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு   தேர்தல் நடந்தது. மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகமான அளவு வாக்குப்பதிவு ஆகியுள்ளது. 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது 74.04 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு தொடர்பாக கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் பினராயி விஜயன், அமைதியை இழந்து கோபத்தை காட்டியுள்ளார்.

பினராயி விஜயன் சொந்த ஊரான கண்ணூரில் வாக்களித்துவிட்டு எர்ணாகுளம் வந்தார். எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து தங்கிய அவர் விமான நிலையத்திற்கு நேற்று காலை புறப்பட்டார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் கேரளத்தில் அதிக அளவு வாக்கு பதிவாகியது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அப்போது பதில் அளிக்காத பினராயி விஜயன் கோபம் காட்டினார். ``அந்தப்பக்கம் தள்ளி நில்லுங்கள்" என்று டென்ஷனாக கூறிவிட்டு காரில் சென்று விட்டார். செய்தியாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பினராயி விஜயன் கடந்த ஆண்டு திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை ``வெளியே செல்லுங்கள்" எனக் கூறியது சர்ச்சையாகியது என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து