பிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      இந்தியா
Priyanka 2019 03 25

லக்னோ : பிரதமரை வரவேற்பதற்காக குடிநீரை வைத்து சாலையை கழுவியதை வன்மையாக கண்டித்த பிரியங்கா காந்தி, மோடி இந்த நாட்டின் பிரதமர் அல்ல, அவர் பிரதம பிரசார மந்திரி என குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் மாநில (கிழக்கு) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் பன்டேல்கன்ட் பகுதிக்குட்பட்ட சில தொகுதிகளில் நேற்று பேரணி மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.பன்டா நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

மோடி நாளை ( இன்று) இங்கு வருவதால் மக்கள் பயன்படுத்த வேண்டிய பொது குடிநீரை வைத்து இந்த நாட்டின் பிரதம பிரசார மந்திரிக்காக பாஜகவினர் சாலைகளை கழுவி வருகின்றனர். இந்த பன்டேல்கன்ட் பகுதியில் உள்ள ஆண், பெண், பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகள், பயிர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் இங்கு தவிக்கின்றனர். இந்நிலையில், இந்த நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்ளும் டெல்லியில் இருந்துவரும் மகாராஜாவின் வருகைக்காக மக்களுக்கு பயன்படும் குடிநீரை இப்படி பா.ஜ.க.வினர் வீணடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து