ஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சென்னை : ஆசிய தடகள போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆரோக்கிய ராஜீவுக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தின் விபரம் வருமாறு:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த தாங்கள் தற்பொழுது கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்று வரும் 2019-ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆசிய தடகள போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தங்களுக்கு, என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் இதுபோன்று சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல சாதனைகள் புரிந்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் எனவும், இத்தருணத்தில் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து