ஐ.எஸ். அமைப்பினரின் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம் - நார்வே பிரதமர்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      உலகம்
IS organization child norway pm 2019 04 25

ஆஸ்லோ : ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைத்து தரப்படும் என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார்.

லண்டன், பிரான்ஸ், நார்வே ஆகியவற்றில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் இணைய பலர் சிரியாவிற்கு சென்றனர். சமீபத்தில் அமெரிக்கப்படையிடம் சில ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்.இதையடுத்து அவர்களது குடும்பங்கள் குறித்து நார்வே பிரதமர் எர்னா சொல்பெர்க் கூறுகையில், நாங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்காக இல்லம் கொடுக்கவில்லை. அவர்களது மனைவிகளுக்கும் இடமில்லை. ஆனால் அவர்களால் வழி தவறி நிற்கும். கைவிடப்பட்ட குழந்தைகளுக்குத் தான் ஆதரவற்றோர் இல்லம் அமைக்க உள்ளோம் என கூறினார்.

இதையடுத்து எர்னாவின் இந்த கருத்து பல அரசியல் தலைவர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக இருந்தது. இது குறித்து முன்னாள் நீதித்துறை அமைச்சர் கூறுகையில், மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஐ.எஸ். பயிற்சி பெற்ற சிறுவர்களுக்கு ஆதரவு தருவது போல் இச்செயல் உள்ளது. இது மிகவும் சிக்கலானது மற்றும் ஆபத்தானது என கூறினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து