முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடைகோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.ஆனால் அஸ்வினி குமார் உபாத்யாயின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவரது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர், அவற்றில் ஒரு தொகுதியில் இருந்து விலகவேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு வீண் செலவும், உழைப்பு வீணடிப்பும் ஏற்படுகிறது. வெற்றிபெற்ற ஒரு வேட்பாளர் ராஜினாமா செய்வது அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அநீதி அளிப்பதாகவும் உள்ளது என மனுதாரர் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து