முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - ராகுல்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

லக்கிம்பூர் கேரி : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி, உன்னா ஆகிய இடங்களில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஒரு பொது பட்ஜெட்டும், ஒரு விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்வோம்.தற்போது, ரூ.20 ஆயிரம் வங்கிக்கடனை திரும்ப செலுத்த தவறினால் கூட விவசாயிகளை ஜெயிலில் தள்ளுகிறார்கள். விவசாய பட்ஜெட், இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்டும். விவசாயிகள் கவுரவமான முறையில் வாழலாம்.அதுபோல், 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளோம். என்ன விலை கொடுத்தாவது அதை நிறைவேற்றுவோம்.ஆனால், பிரதமர் மோடி ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறி ஏழைகளை ஏமாற்றி விட்டார். அவர் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டை பெரிதும் பாதித்துள்ளது. வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. இதனால், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவோம் என்ற வாக்குறுதி வெறும் பேச்சு என்றாகி விட்டது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் 3 ஆண்டுகளுக்கு வியாபாரிகள் எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டி இருக்காது. நாட்டில் நிலைமை வேகமாக மாறி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து