முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் தொகுதி தேர்தலை நடத்தகோரி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி, வேலூர் தொகுதி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு ஒன்றை அளித்துள்ளார். 
  
பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர்.

அங்கு தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வந்த நிலையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் நண்பர்கள் வீடு மற்றும் கல்லூரியில் நடந்த சோதனையில் ரூ.11 கோடி சிக்கியது.

இதையடுத்து வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் கடந்த 18-ந்தேதி நடந்த ஓட்டுப்பதிவில் வேலூரை தவிர 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.  

வேலூர் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த தொகுதி தேர்தலை மே 19-ந்தேதி தமிழகத்தில் நடக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஏ.சி. சண்முகம்  டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அதில், வேலூர் தொகுதி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து