உபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      அரசியல்
Priyanka Gandhi 2019 04 25

 ஜான்சி, உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான பிரியங்கா உத்தரபிரதேசத்தில் நேற்று பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.   

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கிய பாராளுமன்ற தேர்தல் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டார். 

அதன் பின்னர் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பிரியங்கா, ரோட்ஷோ நடத்தி மக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று காலை உத்தரபிரதேசத்தின் ஜான்சி தொகுதியில் பிரம்மாண்டமான ரோட்ஷோ நடத்தினார். வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள் மலர் தூவி, முழக்கங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ஜலாவுன் தொகுதிக்கு உட்பட்ட குர்சராய் மற்றும் ஓராய் பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டார். இதேப்போல் இன்று மதியம் 12.30 மணி அளவில் உன்னாவோ பகுதியில் ரோட்ஷோ நடத்தி, பின்னர் இஸ்ரவுளி மற்றும் தெவா ஷெரீப் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து