முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 3 - மடங்கு தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் - பா.ம.க.வினருக்கு ராமதாஸ் உத்தரவு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நான்கு சட்டசபை  இடைத்தேர்தல் தொகுதிகளிலும் மற்ற கூட்டணிக் கட்சியினரை விட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மூன்று மடங்கு தீவிரமாக உழைக்க வேண்டும் என்று பா.ம.க.வினருக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியினருக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையின் போது அ.தி.மு.க. கூட்டணி கட்சியினரிடையே அற்புதமான ஒருங்கிணைப்பு நிலவியது. எந்த தொகுதியில் எந்தக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்று பகுத்துப் பார்க்காமல் அனைத்துத் தொகுதிகளிலும் நமது வேட்பாளர் தான் போட்டியிடுகிறார் என்று கருதி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பணியாற்றினார்கள். அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட உழைப்பின் காரணமாகத் தான் கடந்த 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற தமிழகத்தின் 38 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் உறுதியான வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அடங்கியுள்ள கோவை, கரூர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களையும், அவற்றை ஒட்டிய மாவட்டங்களையும் சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அ.தி.மு.க. தேர்தல் குழுவுடன் இணைந்து வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்.கூட்டணி அறத்தைக் கடைபிடிப்பதில் முதலிடத்தில் உள்ள கட்சி என்றால் அது பா.ம.க. என்பதை அனைவரும் அறிவார்கள். அது இந்த இடைத்தேர்தல்களிலும் நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக அ.தி.மு.க.வினரும், மற்ற கூட்டணிக் கட்சியினரும் எந்த அளவுக்கு தீவிரமாக பரப்புரையில் ஈடுபடுகிறார்களோ, அதை விட 3 மடங்கு தீவிரமாக பா.ம.க.வினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து