முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

காலிறுதிக்கு...

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான பிவி சிந்து இந்தோனேசியாவின் சொய்ருன்சியாவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-15, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பிவி சிந்து காலிறுதியில் சீனாவின் காய் யன்யன்-ஐ எதிர்கொள்கிறார்.

சமீர் வர்மா...

மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவால் கொரியாவின் கிம் கா இயுன்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-13, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். சாய்னா அடுத்த சுற்றில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொள்கிறார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா ஹாங்காங் வீரர் கா லாங் அங்குஸை 21-12, 21-19 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து