முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவிக்கிறதாம்: பாக். அதிபர்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், நாங்கள் அமைதியை நேசிக்கிறோம். ஆனால், இந்தியாவோ பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளார்.

கா‌‌ஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவப்படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தின. அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் விமானங்கள், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற போது விரட்டி அடிக்கப்பட்டன. இந்த சம்பவங்களால் இரு நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

இந்தியாவை நாம் அணுகுகிற முறையில் இருந்தே நாம் அமைதியை நேசிப்பவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அடிப்படைவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் பாடுபட்டு வருகிறது. ஆனால் இந்தியாவோ, இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவின் அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. பாகிஸ்தான், கடுமையான உள்நாட்டு பிரச்சினைகளை எதிர்கொண்டது. அதை கடந்து ஸ்திரத்தன்மை நோக்கி நகர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து