முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜினில் கோளாறு: ராகுல் சென்ற விமானம் டெல்லிக்கு திரும்பியது

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து டெல்லிக்கே விமானம் திரும்பி வந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசாவின் பலசோர் மற்றும் மகராஷ்டிராவின் சங்கம்னர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய ராகுல் முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவர் நேற்று காலை டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் கட்சியின் முக்கிய தலைவர்களும் சென்றனர். ஆனால், விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்துள்ளது. இத்தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சமஸ்திபூர், பலசோர் மற்றும் சங்கம்னர் பிரசாரம் பின்னர் நடைபெறும் என கூறியுள்ளார். சிரமத்திற்கு வருந்துவதாகவும் ராகுல் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து