முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்க பெண் எழுத்தாளரின் படம் இடம்பெற்றதால் சர்ச்சை

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் பட்டியலில் தவறுதலாக அமெரிக்க பெண் எழுத்தாளர் படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

கொழும்புவில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும் பயங்கரவாதிகள் 6 பேரின் படங்களை இலங்கை நாட்டு காவல் துறை வெளியிட்டது. அந்த பட்டியலில் அப்துல் காதர் பாத்திமா கதியா என்ற பெண்ணின் பெயரும் படமும் இடம்பெற்று இருந்தது. இந்த படத்தில் இருப்பவர் அமெரிக்காவை சேர்ந்த பெண் எழுத்தாளர் என்றும் தவறுதலாக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த புகைப்படத்தில் இருப்பவர் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் வசிக்கும் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அமாரா மஜீத் ஆவார். இலங்கை வெளியிட்ட படத்தால் அதிர்ச்சி அடைந்த அமாரா, தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை காவல்துறைக்கு கண்டனங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக இலங்கை காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்ற பெண் தேடப்படும் நபராக உள்ளார். அவரது புகைப்படம் என கூறி வெளியிடப்பட்ட படம் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து