முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்தமாக கார் இல்லை! கையிருப்பு ரூ.38,750தான் வேட்புமனுவில் பிரதமர் மோடி தகவல்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ, வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி தனது வருமானம் மற்றும் சொத்து விபரங்களையும் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மோடியின் வருமானம் என்பது அவரது அரசு சம்பளம் மற்றும் வங்கிகளில் வைத்திருக்கும் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி மட்டுமே. அவ்வகையில் கடந்த 2014-ம் ஆண்டில் அவரது மொத்த வருமானம் 9.69 லட்சம் ரூபாய். 2015-ம் ஆண்டில் 8.58 லட்சம் ரூபாய்.  2016-ம் ஆண்டில் 19.23 லட்சம் ரூபாய்.  2017-ம் ஆண்டில் 14.59 லட்சம் ரூபாய்.  2018-ம் ஆண்டில் 19.92 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு மொத்தம் 2.51 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு 1.41 கோடி ரூபாய். அசையாச் சொத்துகளின் மதிப்பு 1.1 கோடி ரூபாய். அவரது கையிருப்பில் தற்போது இருக்கும் ரொக்கப்பணம் 38 ஆயிரத்து 750 ரூபாய். தனக்கு கடன்கள் ஏதுமில்லை. பிரதமர் அலுவலகம் மற்றும் வருமான வரித்துறையிடம் இருந்து 2.2 லட்சம் ரூபாய் வரவேண்டிய நிலுவைத் தொகையாக உள்ளது. மற்றபடி, தனது பெயரில் சொந்தமாக கார் அல்லது இருசக்கர வாகனம் ஏதுமில்லை என மோடியின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து