முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் பா.ஜ.க 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

 பெங்களூரு : பாராளுமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறினார்.  

கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில்  நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, பிரகலாத்ஜோஷி, ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்தும், சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயருக்கு கட்சி மேலிடத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தோம். தலைவா்கள் தங்களின் தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவு குறித்து எடுத்துக் கூறினர். அவர்கள் அளித்த தகவலின்படி, கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இந்த எண்ணிக்கையில் இருந்து ஒரு தொகுதி கூடுமே தவிர அதில் குறைய வாய்ப்பு இல்லை.

சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பியவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம். கட்சியின் நலன் கருதி, தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிர முயற்சி செய்வோம்.  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து