முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க உத்தரவிட வேண்டும் - சபாநாயகருக்கு அரசு தலைமை கொறடா பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க உத்தரவிட வேண்டுமென சபாநாயகர் தனபாலுக்கு அரசுத்தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக (முதல்வருக்கு எதிராக) அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவிடம் அரசுக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் தொடரப்பட்டு அரசுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது.

சபாநாயகருடன்...

இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் தினகரனின் அ.ம.மு.க.வில் முக்கிய பொறுப்புகள் வகித்து வந்த கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.பிரபு, விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச் செல்வன், அறந்தாங்கி உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகியோரை நீக்குவது தொடர்பான பிரச்னை நீடித்து வந்தது. இதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை அரசுத் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உரிய நடவடிக்கை...

நீண்டசந்திப்புக்கு பின்னர் அரசுத் தலைமை கொறடா ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். பிரபு (கள்ளக்குறிச்சி) வி.டி. கலைச்செல்வன் (விருத்தாசலம்), ஏ.ரத்தினசபாபதி (அறந்தாங்கி) ஆகியோர் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு எற்படும் வகையில் கட்சி விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே மேற்கூறிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திடக்கோரி இன்று (நேற்று) மனுவினை சபாநாயகரிடம் அளித்துள்ளேன். மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் சட்டப்பூர்வமாக சபாநாயகர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.

ஆதாரங்களின்...

இதைத் தொடர்ந்து அவரிடம் 3 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மூன்று எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக கூடுதல் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் தினகரனுடன் கலந்து கொண்ட விழாக்களின் புகைப்படங்கள் தொடர்பான ஆதாரங்களை அளித்துள்ளேன். ஏற்கனவே ஒரு முறை (அக்டோபர் ) அப்போது கிடைத்த ஆதாரங்களை வைத்து மனு அளித்தேன். தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து மனு அளித்துள்ளேன். தினகரன் கட்சியின் முக்கிய பொறுப்பில் அந்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளார்கள். எனவே அவர்கள் மீதான நடவடிக்கைக்கு கடிதம் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மகத்தான வெற்றி...

நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வி பயம் இதற்கு காரணமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜேந்திரன், புதுச்சேரி உள்ளிட்ட 39 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் இதில் அ.தி.மு.க.வுக்கு எதிரான கருத்துக் கணிப்புகள் எதுவும் செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து