ராமேசுவரத்திலிருந்து சுற்றுலா தலங்களை இணைக்க கூடிய புதிய இரயில்கள் தினசரி இயக்கபடும் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்:

புதன்கிழமை, 1 மே 2019      ராமநாதபுரம்
1 rms raiway

இராமேஸ்வரம், - சுற்றுலா தலமான ராமேசுவரம் பகுதியிலிருந்து மற்ற சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையாக சுற்றுலா வாசிகளின் வசதிக்கு தேவை கேற்ப தினசரி ரயில்கள் இயக்கபடும் என ராமேசுவரம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தபோது மதுரையில் புதியதாக போற்பேற்றுள்ள  மதுரை ரயில்வே கோட்டம் மேலாளர் லெனின் நேற்று தெரிவித்தார். 
மதுரை  இரயில்வே கோட்ட புதிய மேலாளராக  பொறுப்பேற்றுள்ள லெனின்  ராமேசுவரம் ரயில் நிலையத்திற்கு நேற்று வருகை தந்தார்.அங்கு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து பாம்பன் ரயில் பாலம், தூக்கு பாலம்,பாம்பன் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி ரயில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசணை நடத்தினார்.
  ஆய்விக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் மதுரை கோட்ட மேலாளர் லெனின் தெரிவித்தது.
 ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகளின்  அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விடுமுறை காலங்கள் என்பதால் சுற்றுலா தலங்களை இணைக்கக்கூடிய புதிய ரயில்கள் பயணிகளின் தேவைக்கு ஏற்ப  ராமேசுவரத்திற்கு தினசரி இயக்கப்பட  வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.மேலும் ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் ரயில் நிலையங்களில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மீட்க பயணிகளின் வசதிகேற்ப குடீநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர் வெடி குண்டு சம்பவத்தின் எதிரொலியாக ராமேஸ்வரம் ரயில் நிலையம், பாம்பன் ரயில் பாலம்  ஆகிய பகுதிகளில் ஆயுதம்  ஏந்திய போலிஸார்,மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் முழு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் ரயில் நிலையங்களில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மதுரை ரயில்வே கோட்ட உதவி மேலாளார் ஓ.பி.ஷா ,மதுரை கோட்ட பாதுகாப்பு துறை கமெண்டோ ஜெகநாதன் உள்பட ரயில்வே பொறியாளர்கள் மற்ற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து