பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் நடிகர் பிரபு தரிசனம் செய்தார்

திங்கட்கிழமை, 6 மே 2019      ராமநாதபுரம்
6 acterprabu

 கமுதி, - கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில், தேவர் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை நடிகர் பிரபு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் தேவர் வசித்து வாழ்ந்து வந்த அவரது பூர்வீக வீடு, பூஜையறை, வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி கூடத்தை பார்வையிட்டார்.
 பின்னர் நடிகர் பிரபு கூறியதாவது.. தனது அப்பா சிவாஜிகணேசன் ஆன்மீகத்தில் அதிக பற்று கொண்ட தேவர் வாழ்ந்த, பசும்பொன் கிராமத்திற்கு சென்று வருமாறு, என்னை பல முறை அறிவுறுத்தியுள்ளார்.  தனது நீண்ட கால ஆசை, எனது அப்பா இறப்பிற்குபின், தற்போது நிறைவேறியுள்ளதால், எனக்கு மன நிம்மதி ஏற்பட்டுள்ளது.  நான் 3 நாட்களாக முதுகுளத்துôர் அருகே கூவர்கூட்டம், பொதிகுளம், சாயல்குடி உட்பட பல பகுதிகளில், நடிகர் பாக்கியராஜ் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் ராவணக்கூட்டம் படத்தில் தற்போது நடித்து வருவதாக கூறினார். அப்போது கமுதி முன்னாள் வடக்கு ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் முத்துராமலிங்கம், நித்தியானந்தம், கோபாலகிருஷ்ணன், தி.மு.க. நகர இளைஞரணி துணை தலைவர் வழக்குரைஞர் நேதாஜிசாரதி, மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் முருகவேல் உட்பட  பலர் பங்கேற்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து