ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை.

புதன்கிழமை, 8 மே 2019      ராமநாதபுரம்
8 rms rain

 ராமேசுவரம்,- மழை வேண்டி ராமேசுவரம் திருக்கோவிலில் சிறப்பு யாக பூஜை மற்றும் வரணஜல பூஜைகள் நேற்று நடைபெற்றது.
  ராமேசுவரம் பகுதியில் மழை பெய்யாத காரணத்தால் பூமியில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகி உள்ளது.இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் சிறிதளவு அவ்வோப்போது மழை பெய்து வருகிறது.ராமேசுவரம் பகுதியில் அந்த மழையும் பெய்யவில்லை.இந்நிலையில் தமிழக அரசு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் வறட்சியை போக்க மழை வேண்டி தமிழக  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த உத்தரவுயிட்டிருந்தது.அதன் பேரில்  பல்வேறு திருக்கோவில்களில்  தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள்  நேற்று நடைபெற்றது.இந்த பூஜையை தொடர்ந்து ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நேற்று அதிகாலையில் சிறப்பு பூஜைகளும்,தீபாராதணையும் நடைபெற்றது.தொடர்ந்து திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சேதமாதவர் சன்னதி முன்பு கலசத்தில் புனித தீர்த்தமான கோடிதீர்த்தம் நிரப்பபட்டு  சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.அதன் பின்னர் திருக்கோவில் குருக்கள்கள் புனித நீரை எடுத்துக்கொண்டு சேதுமாதவர் தீர்த்தக்குளத்தில் ஊற்றி 10க்கும் மேற்பட்ட குருக்கள்கள் கழுத்தளவு குளத்தின் நீரில் நின்று வர்ண பாகவனிடம் மழை வேண்டி சிறப்பு மந்திரங்கள் வாசிக்கப்பட்டு பூஜைகள் நடத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் மேலாளர் முருகேசன்,கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன்,நேர்முக உதவியாளர் கமலநாதன்,பேஷ்கார்கள் அண்ணாதுரை,கண்ணன்,கலைச்செல்வம்,செல்லம்,திருக்கோவில் பணியாளர்கள் முத்துக்குமார், பெய்து

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து