கரப்பான் பூச்சி இடையூறு செய்தாலும் அது எதிர்க்கட்சியின் சதியாம்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஜோக்

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      உலகம்
cockroach-Philippine-President 2019 05 10

மணிலா, பிலிப்பைன்ஸ் அதிபரின் பிரசார கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சியால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

பிலிப்பைன்சில் வருகிற 13-ம் தேதி பொது தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிபர் ரோட்ரிகோ துதர்தே நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், போஹால் மாகாணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது, கரப்பான் பூச்சி ஒன்று அவரது வலது தோள்பட்டையின் மீது வந்து அமர்ந்தது.

இதனை பார்த்ததும், அதிபரின் பெண் உதவியாளர், தன் கையில் வைத்திருந்த காகிதத்தால் கரப்பான் பூச்சியை விரட்ட முயன்றார். ஆனால் அது, அதிபரின் தோள்பட்டையில் மேலும், கீழுமாக ஓடி ஆட்டம் காட்டியது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரோட்ரிகோ துதர்தே, தனது கையால் கரப்பான் பூச்சியை தட்டி விட்டு விட்டு, இது எதிர்கட்சியின் சதி என நகைச்சுவையாக கூறி பேச்சை தொடர்ந்தார். இதனால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து