அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் மூளும் அபாயம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      உலகம்
US China 2019 05 10

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்க மாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீன பொருட்களுக்கான இறுக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கணிசமாக உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் மூண்டது. இதற்கிடையில், அர்ஜென்டினாவில் நடந்த ஜி 20 மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் அதிபர் டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அத்துடன் பேச்சுவார்த்தையின் போது சீனா ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் எனவே கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்க மாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து