ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      உலகம்
earthquake Japan 2019 05 10

டோக்கியோ, ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. மியாசகி பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். உள்ளூர் நேரப்படி, காலை 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து