மான்செஸ்டர் சென்ற விமானத்தில் சக பெண் பயணிக்கு அத்துமீறி முத்தம் கொடுத்த இந்தியருக்கு ஒரு வருட சிறை

சனிக்கிழமை, 11 மே 2019      உலகம்
Manchester 11 05 2019

Source: provided

லண்டன் : மும்பையில் இருந்து மான்செஸ்டருக்கு சென்ற விமானத்தில் சக பெண் பயணிக்கு அத்துமீறி முத்தம் கொடுத்த இந்தியருக்கு ஓராண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது

மும்பையைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங். இவர் டூரிஸ்ட் விசா மூலம் மான்செஸ்டருக்கு சென்று, அங்கு தங்கி சுற்றி பார்க்க முடிவெடுத்துள்ளார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மும்பையில் இருந்து மான்செஸ்டருக்கு விமானத்தில் புறப்பட்டார். இவருக்கு அருகில் 20 வயதுடைய பெண் ஒருவர், தனது தாயுடன் பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது ஹர்தீப், ஆரம்பத்தில் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

அந்த பெண் அங்கு உட்காரவே மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். தொடர்ந்து ஹர்தீப் மெதுவாக பேச தொடங்கவே, வழியின்றி பதில் மட்டும் கூறி வந்துள்ளார். அதன் பின்னர் இயர்போன் போட்டுக் கொண்டு படம் பார்க்க தொடங்கிவிட்டார். சிறிது நேரம் அமைதியாக இருந்த ஹர்தீப், அந்த பெண்ணிடம் மீண்டும் பேச்சு கொடுத்துள்ளார். அந்த பெண்ணால் படமும் பார்க்க முடியவில்லை.  விமானத்தில் அனைவரும் தூங்க தொடங்கி விட்டனர். நேரம் செல்ல செல்ல அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்ததை நிறுத்தி விட்டார். அந்த பெண்ணும் நிம்மதி அடைந்து தூங்க தொடங்கினார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஹர்தீப், அப்பெண்ணுக்கு அத்துமீறி முத்தம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் அப்பெண் அலறிக் கொண்டு விழித்து விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்ததை எழுப்பியுள்ளார். அனைவரும் எழவே, நடந்ததை விமான ஊழியர்களிடம் விரிவாக கூறியுள்ளார். இதையடுத்து விமான ஊழியர்கள் அங்கிருந்தே மான்செஸ்டர் போலீசாருக்கு நடந்ததை சொல்லி விட்டனர். மான்செஸ்டர் போலீசாரும் தகவல் அறிந்தவுடன் விமான நிலையத்துக்கு விரைந்து, விமானம் தரையிறங்குவதற்காக காத்திருந்தனர். விமானம் வந்தவுடன், ஹர்தீப்பை கைது செய்தனர்.

பின்னர் ஹர்தீப் மீது பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையின்போது தொடக்கத்தில் இல்லை என மறுத்து வந்த ஹர்தீப், பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கு கடந்த 9-ம் தேதி மான்செஸ்டர் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹர்தீப்புக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து