டோனி ஒரு சகாப்தம் ஹெய்டன் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      விளையாட்டு
Hayden 2019 05 12

Source: provided

மெல்போர்ன் : டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல, அவர் ஒரு சகாப்தம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 சீசனில் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றால் நான்காவது முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெறும்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ ஹெய்டன் டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். டோனி குறித்து ஹெய்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல. கிரிக்கெட்டின் சகாப்தம் அவர்.

பல வகைகளில் கில்லி கிரிக்கெட் அணிகளின் தலைவர் போலவும், நம்மில் ஒருவராகவும் அவர் தெரிவார். எதையும் செய்ய தகுதியானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து