நீங்கள் வீசியது நோ-பால்: சச்சின் டெண்டுல்கருக்கு சுட்டிக் காட்டிய ஐ.சி.சி.

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      விளையாட்டு
ICC 2019 05 12

Source: provided

மும்பை : நெட்டில் டெண்டுல்கர் வீசிய பந்து நோ -பால் என்பதை முன்னாள் அம்பயர் படத்தை அப்லோடு செய்து ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ளது.

46-வயதான சச்சின் டெண்டுல்கர், கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் அணியான மிடில்செக்ஸ் அணியுடன் இணைந்து டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியை சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்காக தொடங்கியுள்ளார்.

இந்த அகாடமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சச்சின் தனது சிறு வயது நண்பரான வினோத் காம்ப்ளி உடன் டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு சென்றார். அங்கு அமைத்திருந்த பயிற்சிக்கான இடத்தில் டெண்டுல்கர் பந்து வீசினார். வினோத் காம்ப்ளி அதை எதிர்கொண்டார்.

இந்த வீடியோவை சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்லோடு செய்திருந்தார். அந்த வீடியோவில் சச்சின் க்ரீஸ்க்கு வெளியே வந்து பந்து வீசியது தெரிந்தது. இதை சுட்டிக்காட்டி ஐ.சி.சி, முன்னாள் அம்பயரான ஸ்டீவ் பக்னர் படத்தை அப்லோடு செய்து, நீங்கள் வீசியது நோ - பால் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து