முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைபேசியை எடுத்துவர அனுமதி இல்லை -திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் .வினய், ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்.

திங்கட்கிழமை, 13 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல்,- நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:-
நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குபதிவு இயந்திரங்கள், திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட முகவர்களும் இதனை கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்தினை கண்காணிக்க ஏதுவாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர்களை கொண்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வருகின்ற மே 23-ந் தேதி அன்று, வாக்கு எண்;ணும் மையத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளான திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம், ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படவும், தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் வாக்குகள் எண்ணும் பணி, ஒவ்வொரு சுற்றும் முடிந்த பின்னர், வேட்பாளர்கள் வாரியாக முடிவுகளை அறிவிக்கும் பணி உள்ளிட்ட தொடர்புடைய பல்வேறு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும், குறிப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும்போது கைபேசி அனுமதி இல்லை என்பதால், வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் கைபேசியை எடுத்துவர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,   தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  பா.வேலு, பழனி சார் ஆட்சியர்  .அருண்ராஜ், , திட்ட இயக்குநர்( .கவிதா மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து