மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: டொமினிக் தியெம்-ஐ வீழ்த்தி டி ஜோகோவிச் சாம்பியன்

திங்கட்கிழமை, 13 மே 2019      விளையாட்டு
Madrid Open Tennis djokovic champion 2019 05 13

மாட்ரிட் : ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் மாட்ரி் ஓபன் டென்னிஸ் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 8-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனாஸ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜோகோவிச் அரையிறுதியில் டொமினிக் தியெம்-ஐ கடும் போராட்டத்திற்குப்பின் ( 7(7)-6(2), 7(7)-6(4)) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து