வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு விளக்கம் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      ராமநாதபுரம்
15 ELECTION COUNTING OFFICIAL TRAINING

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்-மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றிற்கான வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது. அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 18.04.2019 அன்று ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியே பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  வருகின்ற 23.05.2019 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.  ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையினை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் நடைபெறும்.  அதேபோல, பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்ஃபரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பில் நடைபெறும்.

 வாக்கு எண்ணிக்கையின்போது முதலாவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்; பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர்  உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் 42 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். 
அந்த வகையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று நடைபெறுகின்றது. இதன் தொடர்ச்சியாக 17.05.2019 மற்றும் 20.05.2019 ஆகிய இரண்டு தினங்கள் என மொத்தம் 3 கட்ட பயிற்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்படும்.  அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்படும் பெட்டியில் உள்ள முத்திரையின்  தன்மையினை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உறுதி செய்திட வேண்டும்.  அதேபோல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரிசை எண் விபரத்தினையும் படிவம் 17சி உடன் ஒப்பிட்டு உறுதி செய்திட வேண்டும். 
இந்த இரண்டு விபரங்களையும் உறுதி செய்த பிறகு சம்பந்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் குறித்த விபரங்கள், வேட்பாளர்கள் வாரியாக பெற்ற வாக்குகள் உள்ளிட்ட விவரங்களை உரிய படிவத்தில் பிழையில்லாமல் பூர்த்தி செய்து, ஒவ்வொரு சுற்றாக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கு சமர்ப்பித்திட வேண்டும். மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைபேசி உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வதற்கு கட்டாயம் அனுமதி இல்லை.  தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை முறையே பின்பற்றி வெளிப்படைத்தன்மையாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் எம்.மதியழகன் (மாவட்ட வழங்கல் அலுவலர்-திருவாடானை தொகுதி), மரு.ஆர்.சுமன் (ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்-ராமநாதபுரம் தொகுதி), எஸ்.ராமன் (பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்-பரமக்குடி தொகுதி), க.கயல்விழி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்-முதுகுளத்தூர்), தி.சுப்பையா (அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர்-அறந்தாங்கி தொகுதி), கார்த்திகைசெல்வி (தனித்துணை ஆட்சியர் முத்திரை-திருச்சுழி தொகுதி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.எஸ்.கண்ணபிரான், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்ஃமுதன்மை பயிற்றுநர் சேக்முகையதீன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து