முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பையை வெல்லும் பந்தயத்தில் ஏழு அணிகள் - ஜான்டி ரோட்ஸ் கணிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : சரியான கலவை கொண்டது இந்திய அணி. இருந்தாலும் மேலும் ஆறு அணிகள் பலத்துடன் உள்ளன என்று ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

சரியான கலவை...

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் உலகக்கோப்பை தொடர் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 15 வீரர்களும் சிறப்பானவர்கள். சரியான கலவை கொண்டது இந்திய அணி என்று தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

பொறுத்துதான்...

இதுகுறித்து ஜான்டி ரோட்ஸ் கூறுகையில் ‘‘இந்தியா மிகச்சிறப்பான 15 பேர்  கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது. ஆனால், மேலும் ஆறு அணிகள் அதேபோன்று உள்ளன. சில வலுவான அணிகளும் உலகக்கோப்பையில் உள்ளன. அவர்கள் அன்றைய தினம், கண்டிசன் ஆகியவற்றை கருத்தில் கொண்ட எப்படி 11 பேர் கொண்ட சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்கிறார்களோ? அதை பொறுத்துதான் சிறந்த அணி என்று கூற முடியும்.

அனுபவ வீரர்கள்....

இந்திய அணியில் ஏராளமான அனுபவ வீரர்கள் உள்ளனர். இளம் வீரரான பும்ரா டெத் ஓவரில் அதிக அளவில் அனுபவம் பெற்றவர். இதை வைத்து பார்க்கும்போது இந்தியாவிக்கு வாய்ப்புள்ளது. ஆனால் மேலும் ஆறு அணிகள் இதேபோல் உள்ளன’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து