முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      விளையாட்டு
Bangladesh win 2019 05 14

டுப்ளின் : மூன்று நாடுகள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது வங்காள தேசம்.

247 ரன்கள்...

வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ஹோப் 87 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 62 ரன்னும் எடுத்தனர்.

அதிர்ச்சி தோல்வி...

வங்காள தேசம் சார்பில் மு‌ஷடாபிசுர் ரகுமான் 4 விக்கெட்டும், மொர்டசா 3 விக்கெட்டும், சகிப் அல்-ஹசன், மிராஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. முஷ்பிகுர் ரகீம் 63 ரன்னும், சவுமியா சர்கார் 54 ரன்னும், முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்தனர்.

அயர்லாந்துடன்...

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்திடம் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. கடந்த 7-ம் தேதி நடந்த ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டில் வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம்- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி 17-ம் தேதி நடக்கிறது. இதில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து