ட்விட்டரில் கோலோச்சிய சி.எஸ்.கே: வீரர்களில் முதலிடம் பிடித்த டோனி

புதன்கிழமை, 15 மே 2019      விளையாட்டு
CSK team 2019 05 15

புதுடெல்லி : ஐ.பி.எல். கோப்பையை மும்பை அணி வென்றாலும், ட்விட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தே அதிகம் பகிரப்பட்டுள்ளது. வீரர்களைப் பொருத்தவரையில், சென்னை கேப்டன் "தல" டோனி, அதிகம் ட்விட் செய்யப்பட்டவராக முதலிடம் பிடித்துள்ளார்.

மும்பை வெற்றி...

கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கிய 12-வது ஐ.பி.எல். தொடர், மே 12-ம் தேதி நிறைவடைந்தது. மிகவும் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையை‌ கைப்பற்றியது. நடப்பு ஐ.பி.எல். தொடரின்போது, சமூகவலைதளமான ட்விட்டரில், ரசிகர்கள், வீரர்கள், அணி உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்த விவரங்களின் தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.

44 சதவீதம் அதிகம்...

அதன்படி மார்ச் ஒன்றாம் தேதி முதல் மே 13-ம் தேதி வரையிலான காலத்தில், ஐ.பி.எல். குறித்து 2 கோடியே 70 லட்சம் ட்விட்கள் பதிவிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 44 சதவீதம் அதிகமாகும். வீரர்களைப் பொருத்தவரையில், சென்னை கேப்டன் தல டோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியும், 3-வது இடத்தில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவும் உள்ளனர்.

ஹர்திக் ட்விட்...

டோனி குறித்த ஹர்திக் பாண்டியாவின் ட்விட், தொடரின் சிறந்த ட்விட்டாக சிறப்பிடம் பெற்றுள்ளது. சென்னையில் மே 7-ம் தேதி நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஹர்திக் பாண்டி‌யா டோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டதோடு, ''எனது முன்மாதிரி, எனது நண்பர், எனது சகோதரர், எனது ஜாம்பாவான்'' என டோனியை குறிப்பிட்டிருந்தார். பாண்டியாவின் இந்த ட்வீட் 16 ஆயிரம் பேரால் ரீ ட்விட் செய்யப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டி...

ரசிகர்களிடையே அதிகம் விவாதிக்கப்பட்ட போட்டியாக, சென்னை மும்பை இடையேயான இறுதிப்போட்டி முதலிடம் பிடித்துள்ளது. இதில் மும்பைக்கு ஆதரவாக 63 சதவிகிதம் பேரும், சென்னைக்கு ஆதரவாக 37 சதவிகிதம் பேரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இறுதிப்போட்டியில், மும்பை அணி கோப்பையை வென்றாலும், ட்விட்டரில் கோலோச்சியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இதில் மும்பைக்கு இரண்டாமிடமும், கொல்கத்தா அணிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து