ஆசிய கலாச்சார திருவிழா சீனாவில் கோலாகல துவக்கம்: நடிகர் ஜாக்கிசான் பங்கேற்பு

வியாழக்கிழமை, 16 மே 2019      உலகம்
Jackie Chan 2019 05 16

பெய்ஜிங், நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்ட ஆசிய கலாச்சார திருவிழா சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது.

ஆசியாவின் நாகரீகம், கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திருவிழாவை சீன அதிபர் ஸி ஜின்பிங் தொடங்கி வைத்தார். இளைஞர்களின் கொண்டாட்டம் ஆசியாவின் கனவு என்ற தலைப்பில் நடக்கும் இந்த திருவிழா உலகில் பல்வேறு நாடுகளின் கலாச்சார நிகழ்வுகள் ஒரே இடத்தில் வண்ணமயமாக அரங்கேறின.

இந்தத் திருவிழாவில் முக்கிய விருந்தினராக பிரபல நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று குங்பூ சண்டையின் சில அசைவுகளை செய்து காட்டினார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த திருவிழாவை கண்டு ரசித்தனர். வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த கலாச்சாரத் திருவிழாவில் ஆசியா கண்டத்தில் உள்ள 47 நாடுகளின் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து