போர் பதட்டம்: தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப வேண்டும்: அமெரிக்கா

வியாழக்கிழமை, 16 மே 2019      உலகம்
whitehouse 2017-12 31

வாஷிங்டன், ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாக்தாத் மற்றும் எர்பில் நகர தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்பும் படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளுடன் கடந்த 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. இதனால், அமெரிக்காவுக்கு பயனில்லை என்று கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், கடந்தாண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். இது அமெரிக்கா - ஈரான் உறவில் மனக்கசப்பை ஏற்படுத்தியது. மேலும் ஈரானை தனது கருப்பு பட்டியலில் அமெரிக்கா இணைத்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்நிலையில், போர் கப்பல்கள், போர் விமானங்கள், பேட்ரியாட் ஏவுகணை உள்ளிட்டவற்றை அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி வருகிறது. ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்ற நோக்கத்தில் படைகளை அனுப்பி வருவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், ஈரான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. விமானம் தாங்கி போர் கப்பல்களையும், தளவாடங்களையும் அமெரிக்கா தொடர்ந்து அனுப்பினால், அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் ஏற்படும் சூழல் உருவாகும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் முக்கிய பணிகள் இல்லாத நிலையில், உடனடியாக நாடு திரும்பும்படி அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து