புல்வாமாவில் நடந்த என்கவுண்டர் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் வீரமரணம்

வியாழக்கிழமை, 16 மே 2019      இந்தியா
jammu and kashmir 2018 10 16

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் சந்தீப் வீர மரணம் அடைந்தார். மேலும் ஒருவர் இறந்துள்ளார் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து